2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

சீன அதிகாரிகளுக்கு பொருளாதார தடை

Freelancer   / 2025 ஏப்ரல் 02 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனா மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்த 6 அதிகாரிகளுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான ஹாங்காங்கில் அரசாங்கத்துக்கு எதிராக 2019இல் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இதனை ஒடுக்குவதற்காக ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டத்தைப் பயன்படுத்தி ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி அமெரிக்கர்கள் உள்பட 19 பேர் கட்டாயமாக நாடு கடத்தப்பட்டனர்.

இதனால் நாடு கடத்த அடக்குமுறையில் ஈடுபட்டதாக கூறி, சீனா மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்த 6 அதிகாரிகளுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

ஏற்கெனவே வர்த்தக வரி உயர்வு மற்றும் தைவான் விவகாரத்தில் இரு நாடுகள் இடையேயான உறவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

இந்தநிலையில் தற்போதைய இந்த பொருளாதார தடை மேலும் பதற்றத்தை தூண்டியுள்ளது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X