2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

சிரியாவுக்கு இடைக்கால ஜனாதிபதி நியமனம்

Freelancer   / 2025 ஜனவரி 30 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக முன்னாள் கிளிர்ச்சியாளர் குழுவின் தலைவர் அகமது அல் ஷரா நியமிக்கப்பட்டுள்ளாரென, இடைக்கால அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கை துறை செய்தி தொடர்பாளர் கர்னல் ஹசன் அப்துல் கானி அறிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் உள்ள ஆயுதமேந்திய பிரிவுகள் கலைக்கப்படுவதையும் அவர் அறிவித்தார். 

அவை அரசு நிறுவனங்களில் ஒருங்கிணைக்கப்படும் என்றும் புதிய அரசியலமைப்பு வரைவு செய்யப்படும் வரை தற்காலிக சட்டமன்ற குழுவை அமைக்க அல் ஷராவுக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்றும், அவர் கூறினார்.

அகமது அல் ஷரா கடந்த மாதம் அசாத்தை வீழ்த்திய தாக்குதலுக்கு தலைமை தாங்கிய இஸ்லாமிய முன்னாள் கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமின் தலைவர் ஆவார். 

அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் ஆளும் கட்சியாக மாறியுள்ளது. மேலும் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த இட்லிப் மாகாணத்தில், முன்னர் அது நடத்திய உள்ளூர் அரசாங்கத்தின் அதிகாரிகளைக் கொண்ட ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைத்துள்ளது.

அசாத்தின் வீழ்ச்சியுடன் முன்னாள் சிரிய இராணுவம் சரிந்த நிலையில், புதிய ஒருங்கிணைந்த தேசிய இராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளை உருவாக்க அல் ஷரா அழைப்பு விடுத்துள்ளார். 

எனினும், இடைக்கால நிர்வாகம் எவ்வாறு முன்னாள் கிளர்ச்சிக் குழுக்களை ஒன்றிணைக்க முடியும் என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X