Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஒக்டோபர் 21 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர், கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவது என்பதை தீர்மானிப்பதில் முக்கிய பங்குவகிக்கும் மாநிலங்களில் தங்களது ஆதரவாளர்களை ஒன்று திரட்டி பிரசார, மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை (20), பென்சில்வேனியா மாநிலத்தில் வாக்காளர்களுக்காக டிரம்ப் தனது மக்கள் சந்திப்பை மேற்கொண்டார். அதேநேரத்தில், கமலா ஹாரிஸ் ஜார்ஜியாவில் மக்கள் சந்திப்பை மேற்கொண்டார்.
பிலடெல்பியாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள மெக்டொனால்ஸுக்கு (McDonald’s) விஜயம் செய்த ட்ரம்பிற்கு, அங்குள்ள ஊழியர் ஒருவர், சிப்ஸ் தயாரித்து பொதியிடுவது எப்படி என்று கற்றுகொடுத்தார்.
"அதைச் சரியாகச் செய்வதற்கும், விரைவாகச் செய்வதற்கும் உண்மையில் சிறந்த நிபுணத்துவம் தேவை," என்று டிரம்ப் தனது கோட்சூட்டை கழற்றி, தான் அணிந்திருந்த சட்டை மற்றும் டையின் மேல் மேலாடையை அணிந்தார். "எனக்கு இந்த வேலை பிடிக்கும்," என்றும் அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
34 minute ago
3 hours ago