Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Editorial / 2025 மார்ச் 06 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் சிந்து நதி பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்க படிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்த சூழ்நிலையில், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணம் அட்டோக் மாவட்டத்தில் பாயும் சிந்து நதி பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்க படிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டு மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
அந்த தங்க படிமம் பாகிஸ்தானுக்கு ஒரு பொருளாதார உயிர் நாடி மட்டுமல்ல, அதற்கு பக்கத்தில் உள்ள நாட்டுடன் எதிர்பாராத இணைப்பையும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கண்டுபிடிப்பு, புதிய வளத்தை வெட்டி எடுப்பதற்கான பெரிய திட்டங்களில் ஈடுபட தூண்டுகோளாக அமைந்துள்ளது. இது நெருக்கடியில் உள்ள அந்நாட்டு பொருளாதாரத்துக்கு ஊக்கத்தையும் நம்பிக்கை உணர்வையும் கொடுத்துள்ளது.
பாகிஸ்தான் அரசின் ஆலோசனை நிறுவனமான ‘தேசிய பொறியியல் சேவைகள் பாகிஸ்தான்’ (நெஸ்பாக்), சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை ஆகியவை இணைந்து தங்கத்தை வெட்டி எடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, சிந்து நதி பகுதியில் 9 தங்க தொகுதிகளுக்கான சுரங்க உரிமைகளை ஏலம் விடுவதற்கான ஆவணங்களை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இது பாகிஸ்தானின் சுரங்க துறைக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டத்தின் தொடக்கமாக இருக்கும் என கருதப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .