2025 மார்ச் 16, ஞாயிற்றுக்கிழமை

சிங்கப்பூருக்கு ஆபத்து

Freelancer   / 2025 பெப்ரவரி 12 , பி.ப. 12:05 - 0     - 28

சிங்கப்பூரில் பயங்கரவாத தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் அரங்கேற வாய்ப்புள்ளது என்று, அந்நாட்டு உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சண்முகம்எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அதை எதிர்கொள்ள மக்கள் மனதளவில் தயாராக இருக்க வேண்டும்" எனவும் சண்முகம் தெரிவித்துள்ளார். 

சிங்கப்பூரில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பின்னர் மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

“சிங்கப்பூரில் பயங்கரவாதத்தால் ஈர்க்கப்பட்ட மூவர் மீது உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் 18 வயது சிங்கப்பூர் இளைஞன் ஆவார். 

“சிங்கப்பூரில் வலதுசாரித் தீவிரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மூன்றாவது இளைஞர் அவர் ஆவார். “உலக அளவில் பயங்கரவாத சித்தாந்தத்தால் ஈர்க்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதனால் ஏற்படும் அச்சுறுத்தல்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

“சிங்கப்பூரில் பயங்கரவாத தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் அரங்கேற வாய்ப்புள்ளது. எனவே, இங்கு வசிக்கும் மக்கள் அதை எதிர்கொள்ள தங்களை மனதளவில் தயார்படுத்தி கொள்ள வேண்டும்" என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X