2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சிங்கப்பூரில் புதுவகை கொரோனா: முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்

Freelancer   / 2024 மே 19 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா பரவுவதால் அனைவரும் முகக்கவசம் அணிய அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யி குங் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த புதிய வகை கொரோனா தொற்றால் 25 ஆயிரத்து 900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 2 முதல் 4 வாரங்களில் இத்தொற்று உச்சத்தை எட்டும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தர தேவையான ஏற்பாடுகள் செய்யவும் மருத்துவமனைகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் உடல் நலம் பாதிக்கப்பட்டு பலவீனமாக உள்ளவர்களும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

எனினும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொது மக்களுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரும் எண்ணம் தற்போது இல்லை என்றும், இந்த வகை கொரோனாவிற்கு K.P.1 மற்றும் K.P.2 என பெயரிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஓங் யி குங் மேலும் கூறினார்.S

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .