2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

சார்ளஸ் வருகையால் பாராளுமன்றத்தில் பரபரப்பு

Freelancer   / 2024 ஒக்டோபர் 21 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மன்னர் சார்ளஸுக்கு எதிராக பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குரல் எழுப்பியுள்ளார்.

  அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சார்ளஸ், இன்று திங்கட்கிழமை (21)  காலை அவுஸ்திரேலிய பாராளுமன்றத்துக்கு சென்றார். அப்போது அவுஸ்திரேலியாவும் பூர்வீக சமூகத்தைச் சேர்ந்த பெண் எம்.பி.யான லிடியா தோர்ப் என்பவர், மன்னர் சார்ளஸ்க்கு எதிராக குரல் எழுப்பினார். 

"இது உங்கள் நிலம் கியைாது, நீங்கள் என்னுடைய மன்னர் கிடையாது. மீண்டும் எங்கள் நிலத்தை கொடுங்கள். எங்களிடம் இருந்து கொல்லையடித்து சென்றதை எங்களிடமே கொடுங்கள்” என முழக்கமிட்டார். அத்துடன், “ஐரோப்பிய குடியேறிகளால் பூர்வீக அவுஸ்திரேலியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்" என லிடியா தோர்ப் கூறினார்.

அதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர், குறித்த எம்.பி பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X