Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 19 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவூதி அரேபியாவில், இந்த ஆண்டில் மாத்திரம், 101 வெளிநாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், சர்வதேச நாடுகளை கவலையடையவும் செய்துள்ளது.
சவூதி அரேபியாவுக்கு, போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஏமன் நாட்டவர் ஒருவருக்கு, நஜ்ரானின் தென்மேற்குப் பகுதியில், சனிக்கிழமையன்று (16), மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து வெளியான தகவலின்படி, 2024இல் இதுவரை 101 வெளிநாட்டவர்களுக்கு, சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
2023 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளை ஒப்பிடுகையில், இது மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஆண்டுக்கு சராசரியாக 34 வெளிநாட்டவர்கள், சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2023இல், சீனா மற்றும் ஈரானுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனையை நிறைவேற்றிய நாடாக சவூதி அரேபியா அறியப்படுகிறது. மேலும்,
2024இல், இதுவரை வெளிநாட்டவர்கள், உள்நாட்டவர்கள் என, மொத்தமாக 274 பேருக்கு மரண தண்டனையை, சவூதி அரேபியா நிறைவேற்றியுள்ளது.
இந்த ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த 21 பேர், ஏமனில் இருந்து 20 பேர், சிரியாவில் இருந்து 14 பேர், நைஜீரியாவில் இருந்து 10 பேர், எகிப்தில் இருந்து 9 பேர், ஜோர்டானில் இருந்து 8 பேர் மற்றும் எத்தியோப்பியாவைச் சேர்ந்த 7 பேர் அடங்குவர்.
அத்துடன், சூடான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தலா மூன்று பேரும், இலங்கை, எரித்திரியா மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து தலா ஒருவரும் அடங்குவர்.
குறிப்பாக, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கான மரணதண்டனைகளே இந்த ஆண்டு எண்ணிக்கையை அதிகரித்துள்ளன.
ஒரு வருடத்தில் வெளிநாட்டினருக்கு அதிகப்படியான மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது இதுவே முதல் தடவை என்றும் சவூதி அரேபியா ஒரு வருடத்தில் 101 வெளிநாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றியதில்லை என்றும் கூறப்படுகிறது.
பெரும்பாலும், கொலை வழக்கு, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கே, சவூதியில் மரண தண்டனை விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
18 minute ago
31 minute ago