2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

சிலியில் காட்டுத்தீ:60 பேர் கைது

Freelancer   / 2025 பெப்ரவரி 09 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள  சிலி நாட்டில் நுபல், மவுலி ஆகிய மாகாணங்களில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.

காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்புப்படையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இரு மாகாணங்களிலும் 15 இடங்களில் காட்டுத்தீ பரவி வருகிறது.

இந்நிலையில், காட்டுத்தீ காரணமாக நுபல், மவுலி ஆகிய 2 மாகாணங்களிலும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இதேவேளை, காட்டுத்தீயை பற்ற வைத்ததாக இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .