2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

’சர்வதேச விசாரணைக்கு தயார்’

Freelancer   / 2025 ஏப்ரல் 26 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பஹல்காம் தாக்குதல் குறித்து சர்வதேச ஆய்வாளர்களால் நடத்தப்படும் எந்தவொரு விசாரணைக்கும் பாகிஸ்தான் ஒத்துழைக்கத் தயாராக உள்ளதாக, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்தார்.

மேலும், “இந்தப் போர் வெடிப்பதை நாங்கள் விரும்பவில்லை, ஏனென்றால் இந்தப் போர் வெடிப்பது இந்தப் பிராந்தியத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும்.

“பயங்கரவாத தாக்குதலின் பின்விளைவை இந்தியா ஒரு சாக்காகப் பயன்படுத்தி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து உள்ளது. உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகிறது.

“எந்த ஆதாரமும் இல்லாமல், எந்த விசாரணையும் இல்லாமல் பாகிஸ்தானைத் தண்டிக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. லஷ்கர்-இ-தொய்பா செயலிழந்து போய் இருக்கிறது. பாகிஸ்தான் கட்டுப் பாட்டில் உள்ள பகுதியில் இருந்து தாக்குதல்களைத் திட்டமிடவோ அல்லது நடத்தவோ எந்த திறனும் அந்த அமைப்பிடம் இல்லை.

“அந்த அமைப்பில் உள்ள எஞ்சியிருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் வீட்டுக் காவலில் உள்ளனர், மேலும் சிலர் காவலில் உள்ளனர்” எனவும்  கூறினார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் இராணுவ வீரர்களின் விடுமுறைகளை அரசு இரத்து செய்துள்ளது. மேலும் பலூச் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகளில் இருந்து வீரர்கள் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள். இதன்மூலம் எல்லையில் வீரர்களை பாகிஸ்தான் குவித்து வருகிறது.AN

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .