2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

சைபீரியாவில் நிலநடுக்கம்

Freelancer   / 2025 பெப்ரவரி 16 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவின் தெற்கு சைபீரியாவில் உள்ள அல்டார் குடியரசு பகுதியில்,, இன்று (16) காலை 8.48 மணிக்கு  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கம், 6.4 ரிச்டர் அளவுகோலில் பதிவாகி இருப்பதாக, ரஷ்ய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

அண்டை பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இருப்பினும் சில இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை இரத்து செய்யப்பட்டு, சேதங்களை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .