2025 ஜனவரி 05, ஞாயிற்றுக்கிழமை

சீனாவின் புது வைரஸ் தொடர்பில் இலங்கை அவதானம்

Freelancer   / 2025 ஜனவரி 03 , பி.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் வைரஸ் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தகவல்களை இன்று (03) அறிந்து கொண்டதாகவும், அதற்கான ஆய்வின் பின்னர் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கவுள்ளதாகவும் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

கொவிட் -19 வைரஸ் பரவலுக்குப் பின் சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு, சீனாவில் Human metapneumovirus (HMPV) (HMPV) எனப்படும் ஒரு வைரஸ் நிலை பரவலாக இருப்பதாகவும், அவர்களில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களும் இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்களில் தகவல்கள் வௌியாகியுள்ளன. மேலும், இன்ஃபுளுவென்சா (influenza) வைரஸூம் பரவி வருகிறதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X