Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Freelancer / 2025 ஏப்ரல் 26 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜம்மு காஷ்மீர் - பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இரத்து செய்துள்ள நிலையில், அது பாகிஸ்தானில் குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் என்றும் குடிநீர் பஞ்சத்தோடு, விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே 9 ஆண்டுகள் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, 1960ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் திகதி சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் கையெழுத்தானது.
உலக வங்கியும் கையெழுத்திட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாட்டு எல்லையில் பாயும் நதிகளின் நீரைப் பயன்படுத்துவதில் இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்துக்கான வழிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
6 பொது நதிகளை நிர்வகிப்பது தொடர்பான இந்த ஒப்பந்தத்தில் சட்லெட், பியாஸ், ராவி ஆகிய கிழக்கு ஆறுகளின் அனைத்து நீரும் இந்தியாவின் கட்டுப்பாடற்ற பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மேற்கு ஆறுகளின் நீரின் பெரும் பகுதி பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, மேற்கு ஆறுகளில் நீர் மின்சாரம் தயாரிக்கும் உரிமை இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்தத் திட்டங்களின் வடிவமைப்பு மற்றும் செயல்பாடு குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டுள்ளது. அது பாகிஸ்தானில் குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும். குடிநீர் பஞ்சத்தோடு, விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும். இதுதான் பாகிஸ்தானுக்கான மிகப் பெரிய தண்டனையாக இருக்கும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.
இது தவிர, சாலை எல்லைகளை இந்திய அரசு மூடியுள்ளது. இது பாகிஸ்தான் மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரித்துள்ளது. தூதரக ரீதியாகவும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. மேலும், சரக்கு போக்குவரத்து ரீதியாக பாகிஸ்தான் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிகிறது.AN
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
4 hours ago