2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் கோஸ்டாரிகாவுக்கு நாடுகடத்தல்

Freelancer   / 2025 பெப்ரவரி 19 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் கோஸ்டாரிகாவுக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களில் இதுவரை 332 பேர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். 

இதேவேளை, இவர்களில் ஆண்கள் கை, கால்களில் விலங்கிட்டு அழைத்து வரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்களை விலங்கிட்டு அழைத்து வரும் சம்பவத்துக்கு காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை கோஸ்டாரிகாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்தியர்கள் உட்பட மத்திய ஆசியா நாடுகளை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் 200 பேரை விமானம் மூலம் மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவுக்கு விமானம் மூலம் அமெரிக்கா நாடு கடத்த உள்ளது. 

அமெரிக்காவில் இருந்து சட்டவிரோத குடியேறிகள் 200 பேர் (20) இராணுவ விமானம் ஊடாக கோஸ்டாரிகாவின் ஜுவன் சண்டமரினா விமான நிலையத்துக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

அங்கிருந்து அகதிகள் முகாம்களுக்கு அழைத்து செல்லப்படும் 200 பேரும் பின்னர் தங்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இதில், எத்தனைபேர் இந்தியர்கள் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X