2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க எல்லையில் இராணுவத்தினர் குவிப்பு

Freelancer   / 2025 ஜனவரி 23 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று, ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்கா-மெக்சிகோ எல்லைக்கு கூடுதலாக 1,000 இராணுவ வீரர்களும், 500 கடற்படையினரையும் அனுப்ப தொடங்கியுள்ளதாக, பென்டகன் தெரிவித்துள்ளது. 

இவர்கள் ஏற்கெனவே பணியில் உள்ள 2,500 வீரர்களுடன் இணைந்து எல்லையில் ரோந்து உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.

மேலும் 5,000க்கும் மேற்பட்ட தடுத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவதற்கான உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் விமானங்களுக்கு உதவ இராணுவ விமானங்கள், ஹெலிகொப்டர்கள் அனுப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X