2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு

Freelancer   / 2023 டிசெம்பர் 02 , பி.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது. 

பிலிப்பைன்சின் மிண்டானா நகர் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. பிலிபைன்ஸ்சில் கடந்த மாதம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்கு உயிர்சேதமும் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் அங்கு 8 பேர் பலியாகினர்.

இந்த நிலையில், மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .