2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

கொக்கைன் உபயோகித்த காட்டுப்பூனை

Freelancer   / 2023 மார்ச் 09 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புலி பாயும், பூனை பதுங்கும் என்றுதான் நாமெல்லாம் கேள்விப்பட்டிருக்கின்றோம் ஆனால், காட்டுப்பூனையொன்று உலகிலேயே மிகவும் செறிவுக்கூடிய போதைப்பொருளை பயன்படுத்தி, துடித்துடிப்பாக இருந்துள்ளது.

  அமெரிக்காவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில், போக்குவரத்து நெரிசலின் ​போது வாகனமொன்றிலிருந்து பாய்ந்த ஆப்பிரிக்க  காட்டுப்பூனையொன்று மரமொன்றில் தாவி தப்பியோடியுள்ளது.

தப்பியோடிய ஆப்பிரிக்க காட்டுப்பூனையைப் பிடித்த ஓஹியோ அதிகாரிகள், குறித்த காட்டுப்பூனை வழக்கத்திற்கு மாறாக துடிதுடிப்பாக செயற்பட்டதை அவதானித்து அதைப் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

அந்தக் காட்டுப் பூனையின் உடலில் கொக்கைன் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

காட்டுப் பூனையின் உடலில் கொக்கைன் எப்படி கலந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X