Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2022 ஜனவரி 17 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்ஜென்டினாவில் பெண் நீதிபதி ஒருவர், கைதியொருவருக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியான லியாடிரோ ராபர்ட்ஸ் என்பவரை பிரபர ரவுடியான கிறிஸ்டைன் புஸ்டோஸ் என்ற நபர் கடந்த 2009 ஆம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்தார்.
இச்சம்பவமானது அந்நாட்டையே உலுக்கிய நிலையில் சிறிது நாட்களின் பின்னர் புஸ்டோஸ் கைது செய்யப்பட்டுச் சிறையிலும் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் புஸ்டோஸுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், தனது தண்டனையை எதிர்த்து புஸ்டோஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்த நிலையில் நீதிபதிகள் குழுவொன்று அமைக்கப்பட்டு குறித்த வழக்குத் தொடர்பான தீர்வு எடுக்கப்பட்டது.
எனினும் குறித்த நீதிபதிகள் குழுவில் இருந்த மரியல் சுவாரெஸ் எனும் பெண் நீதிபதி, புஸ்டோஸுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கக் கூடாது எனவும் அவரின் தண்டனை காலத்தை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்நிலையில் குற்றவாளிக்கு மரியல் பரிந்து பேசுவது ஏன் என நீதிபதிகளுக்குள் கேள்வி எழுந்தது. மேலும் புஸ்டோஸ் அடைக்கப்பட்டிருந்த சிறையில் நடந்த சம்பவங்கள் சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டன.
எனினும் இதுக்குறித்து, மரியல் கூறுகையில் நான் சிறைக் கைதியை முத்தமிடவில்லை. நாங்கள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறோம் என தெரிந்தும் எப்படி இவ்வாறு செய்வோம்? என்னார்.
இச் சம்பவம் தற்போது ஆர்ஜென்டினாவில் பெரிய பேசுப்பொருளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
4 hours ago
5 hours ago
7 hours ago