2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கூட்டமாக வெளியேறும் பலஸ்தீனிய மக்கள்

Freelancer   / 2024 மே 29 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசா-எகிப்து எல்லையில் உள்ள ரஃபா நகரில் கூடாரங்கள் அமைத்து வசித்து வருவோர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், இஸ்ரேலுக்கு எதிராக கடும் எதிர்வினையை ஆற்றியுள்ளது.

பல்வேறு நாடுகள் இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. கடந்த வாரம் ஐ.நா. உயர்மட்ட நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, இஸ்ரேலியப் படைகள் தங்கள் தாக்குதலை நடத்தியுள்ளதால் உலகளவில் இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ரஃபா நகரில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி, கான் யூனிஸ் நகரில் குடியேறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலுக்கு மத்தியிலும் அவர்கள் குடும்பத்தினருடன் வாகனங்களில் பொருட்களுடன் வெளியேறுகின்றமை காண்போரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேல், இந்த கொடூரமான தாக்குதலை "ஒரு சோகமான விபத்து" என்று கூறியிருக்கிறது. இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டிருக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம், "பொதுமக்கள் உயிரிழப்பைக் குறைக்க நாங்கள் முயற்சித்த போதிலும், நடந்த இந்த சம்பவம் எதிர்பாராதது மற்றும் உள்நோக்கம் அற்றது.

இவ்வளவு பெரிய தீ அங்கு பற்றி எரிவதற்கு என்ன காரணம் என்பதை எங்கள் விசாரணையானது கண்டுபிடிக்க முயல்கிறது" என்றுள்ளது. இது மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .