2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

“கூடுதல் நிதி வேண்டும்”

Mithuna   / 2023 டிசெம்பர் 14 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுத்தது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இராணுவ உதவி, பொருளாதார ரீதியாக உதவி வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்கா, இதுவரை 111 பில்லியன் அமெரிக்க டாலர்கள்  வரை நிதி உதவி செய்திருக்கிறது.

எனினும்,  தனது கட்டுப்பாட்டுக்குள் உக்ரைனை கொண்டுவர ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா வந்தார்.

அமெரிக்க பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் முன்னிலையில் உரையாட விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய ஜெலன்ஸ்கி, “2 ஆண்டுகளாக போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2-ம் உலக போருக்கு பின் மிக நீண்ட போரில் சுதந்திரத்திற்காக தொடர்ந்து போராடி வருகிறோம்” என்றார். மேலும், உக்ரைனுக்கு கூடுதல் நிதி உதவியையும் கோரினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .