2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது

Freelancer   / 2024 ஓகஸ்ட் 16 , மு.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்பிரிக்க கண்டத்திற்கு வெளியே முதன்முதலில் குரங்கம்மை (எம்-பாக்ஸ்)  பாதிப்பு ஸ்வீடனில் பதிவாகியுள்ளது.

குரங்கம்மை நேயானது வேகமாக பரவி வரும் ஒன்று என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குரங்கம்மை (எம்-பாக்ஸ்) நோய்த்தொற்றை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

எம்-பாக்ஸ் அல்லது குரங்கம்மை, கொடிய நோய்த்தொற்று வகையைச் சேர்ந்தது. இது முதலில் கொங்கோ நாட்டில் வேகமாகப் பரவியதால் சுமார் 450 நபர்கள் உயிரிழந்தனர்.

தற்போது, இந்த நோய்த்தொற்று மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பரவி வருகிறது.

மேலும் இந்த வைரஸின் புதிய வகை திரிபு (Variant) மக்கள் மத்தியில் பரவும் வேகம் மற்றும் இதனால் அதிகரிக்கும் இறப்பு விகிதம் குறித்து விஞ்ஞானிகள் கவலையில் உள்ளனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X