2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை

காற்று மாசுபாடு ; மூடப்படும் பாடசாலைகள்

Freelancer   / 2024 நவம்பர் 04 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் இரண்டாம் பெரிய நகரான லாகூரில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால் சுமார் ஒரு வாரத்துக்குத் பாடசாலைகளை மூடப்போவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சுமார் 14 மில்லியன் மக்கள் வாழும் நகரில் பல நாட்களாக காற்றின் தரம் மோசமாகியிருக்கிறது.

அடுத்த 6 நாள்களுக்குக் காற்றின் தரத்தில் மாற்றம் இருக்காது என்று வானிலை முன்னறிவிப்பு காட்டுகிறது.

அதனால் தொடக்கப் பாடசாலைகளை மூடுவதற்கு முடிவெடுக்கப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், பாடசாலைகளில் முகக்கவசம் அணியப்படவேண்டும் என்றும் பாகிஸ்தான் அரசாங்கம் கூறியது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X