2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

காரை இயக்கும் சூரியன் ; அசத்தும் நெதர்லாந்து நிறுவனம்

Ilango Bharathy   / 2022 ஜூன் 13 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சாரமின்றி சூரிய சக்தியில் நாளொன்றுக்கு 70 கிலோ மீற்றர் தூரம்  செல்லக் கூடிய சோலார் காரை நெதர்லாந்தை சேர்ந்த ‘லைட் இயர் ‘(Lightyear)என்ற மின்சாரக்  கார் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கி  சாதனை படைத்துள்ளது.

 லைட் இயர் வன் என அழைக்கப்படும் ( Lightyear One) குறித்த காரின் மேற்பகுதி மற்றும் பேனட் பகுதியில், 5 சதுர மீற்றர் சுற்றளவுக்கு பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள்,  காரை இயக்குவதற்குத்  தேவையான சூரிய சக்தி ஆற்றலை உருவாக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதிகபட்சமாக 160 கிலோ மீற்றர் தூரம் வரை செல்லும் இக்காரானது , இயக்கிய  பத்தாவது செக்கனிலேயே 100 கிலோ மீற்றர் வேகத்தை எட்டிவிடும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இக்காரானது இலங்கை மதிப்பில் 9.27  கோடி ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் சந்தைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X