Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 05 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
காதலனால் தீவைத்து எரிக்கப்பட்ட ஒலிம்பிக் வீராங்கனை பரிதாபமாக உயிரிழந்தார்.
கென்யாவில் வசித்து வந்த உகாண்டா தடகள வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி அவரது காதலனால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பலத்த காயமடைந்த அவர் உடலில் 75% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தாக உகாண்டா தடகள கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு பெரிஸ் ஒலிம்பிக்கில் தொலைதூர ஓட்டப்பந்தயத்தில் 44ஆவது இடத்தைப் பிடித்த வீராங்கனையான ரெபேக்கா செப்டேஜி, மேற்கு டிரான்ஸ் நஸோயா கவுண்டியில் உள்ள அவரது வீட்டில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் தீவைத்து எரிக்கப்பட்டார்.
கருத்து வேறுபாடு காரணமாக அவரது காதலன் பெட்ரோலை மேலே ஊற்றி எரித்துள்ளார். இதில் காதலனுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உகாண்டா தடகள கூட்டமைப்பு தெரிவிக்கையில், “குடும்ப வன்முறையால் துரதிருஷ்டவசமாக உயிரிழந்த எங்கள் தடகள வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி இன்று (செப் 5) அதிகாலை மரணமடைந்ததை அறிவிப்பதில் நாங்கள் மிகுந்த வருத்தமடைகிறோம். கூட்டமைப்பாக, இதுபோன்ற செயல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.
அதேசமயம், அவரது மரணத்தை குடும்பத்தினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பதோடு, அவர் அனுமதிக்கப்பட்ட எல்டோரெட்டில் உள்ள மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் ஓவன் மெனாச் தடகள வீராங்கனையின் அனைத்து உறுப்புகளும் செயலிழந்ததால் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
51 minute ago
1 hours ago