2025 ஏப்ரல் 09, புதன்கிழமை

காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் கைதிகள்

Freelancer   / 2025 ஜனவரி 12 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

லொஸ் ஏஞ்சலிஸில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் இணைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அவர்களில் பெண்களும் அடங்குகின்றனர் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
 
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பரவிவரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுவரை லொஸ் ஏஞ்சலிஸில் 37 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்புகள் தீக்கிரையாகியுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும், கட்டடங்களும் தீக்கிரையாகியுள்ளன.  (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X