2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

காசாவில் எரிபொருள் தட்டுப்பாடு

Simrith   / 2024 மே 08 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசாவில் குடிநீர் வழங்குவதந்கும், தகவல் தொடர்புகளை பராமரிப்பதற்கும், உதவிகளை வழங்குவதற்குமான முக்கியமான டீசல் எரிபொருள் புதன்கிழமை தீர்ந்துவிடும், மேலும் தெற்கில் ஏற்கனவே உள்ள உணவுகள் வார இறுதிக்குள் இல்லாமல் போகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று ஐநாவின் மூத்த மனிதாபிமானவாதி ஒருவர் தெரிவித்துள்ளனார்.

பலஸ்தீன பிரதேசங்களில் உள்ள ஐ.நா.வின் மனிதாபிமான அலுவலகத்தின் தலைவர் ஆண்ட்ரியா டி டொமினிகோ நேற்று, இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை மற்றும் ரஃபாவில் உள்ள வெளியேற்ற உத்தரவு பல்லாயிரக்கணக்கான மக்கள் கட்டாயமாக இடம்பெயர்வதற்கு காரணமாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

முக்கியமாக மணல் திட்டுகள் மற்றும் கழிவறைகள், நீர்நிலைகள், வடிகால், தங்குமிடம் அல்லது சுகாதார வசதிகள் இல்லாத இடத்திற்கே இஸ்ரேலானது பலஸ்தீனியர்களை செல்ல நிர்ப்பந்தித்துள்ளது என்று திரு டி டொமினிகோ ஜெருசலேமில் இருந்து ஒரு நிகழ்நிலை செய்தி மாநாட்டில் கலந்து கொண்டபோது கூறினார்.

புதிய இடங்களுக்கு மக்களைக் கொண்டு செல்வதற்கான பொருட்கள் மற்றும் எரிபொருளின் வருகையின்றி நிலைமைகளை மேம்படுத்துவது சாத்தியமற்றது.

எரிபொருள் மற்றும் அதிக உணவு தயாரிபிற்கான மா இல்லாமல், காசா முழுவதிலும் உள்ள ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்தால் ஆதரிக்கப்படும் 16 பேக்கரிகள் செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன ” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .