2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

காசாவில் 50 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலி

Freelancer   / 2024 நவம்பர் 04 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த இரண்டு நாள்களில் மாத்திரம் காசா வடக்கு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 50 இற்கும் மேற்பட்ட சிறார்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.
 
நூற்றுக்கணக்கான மக்கள் செறிந்து வாழும் இரண்டு தொடர் மாடிகள் தாக்கப்பட்டதையடுத்தே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கெதரின் ரஸ்ஸல் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில், போலியோ தடுப்பூசி வழங்கிக் கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் பணியாளர்கள் சிலரும் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .