2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

“காசா விவகாரத்தில் அமைதி காக்க மாட்டேன்” -கமலா ஹாரிஸ் எச்சரிக்கை

Freelancer   / 2024 ஜூலை 26 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

“காசா விவகாரத்தில் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை” என அமெரிக்க தேர்தல் ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனம் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று அமெரிக்கவுக்கு பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேசுவார்த்தையில் அமைதிக்கான உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளும்படி நெதன்யாகுவை பைடன் வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள கமலா ஹாரிஸ் நெதன்யாகுவிடம் பேசுகையில், “காசாவில் கடந்த 9 மாதங்களாக நடந்தவை கொடூரமானது. மக்களின் அவல நிலையையும் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியவில்லை. அவர்களின் துன்பங்களைப் பொருட்படுத்தாமல் எங்களை நாங்களே மரத்துப்போகச் செய்ய முடியாது. இவற்றைக் கண்டு நான் அமைதியாக இருக்கமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமர் நெதன்யாகுவுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தன்னைத் தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை இருக்கிறது. அதேவேளையில் காசாவில் மக்கள் சந்திக்கும் துயரத்தை பற்றிய எனது அக்கறையை நெதன்யாகுவிடம் மிகத் தெளிவாக முன்வைத்தேன். இந்த விடயத்தில் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை. இந்த விவகாரத்தில் உணர்ச்சியற்றவர்களாக மாற முடியாது!” என்று அவர் தெரிவித்தார்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X