2025 மார்ச் 31, திங்கட்கிழமை

காசா மக்களுக்கு அதிரடி உத்தரவு

Freelancer   / 2025 மார்ச் 27 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசா நகரின் பல பகுதிகளில் இருந்து மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் இராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மார்ச் முதல் வாரத்தில் முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்த சூழலில், 2ஆவது கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் உள்ளது.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு எதிராக புதிதாக தாக்குதல் நடவடிக்கையை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. இந்த சூழலில், காசா நகரில் உள்ள பல பகுதிகளில் இருந்து வெளியேறும்படி மக்களுக்கு இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டுள்ளது. அவர்களை தெற்கு பகுதிக்கு செல்லும்படி கூறியுள்ளது.

இதன்படி, ஜெய்தவுன், டெல் அல்-ஹவா மற்றும் பக்கத்திலுள்ள பிற நகரங்களில் உள்ள மக்களையும் வெளியேறி விடும்படி இஸ்ரேல் கூறியுள்ளது. 17 மாத கால போரின் பகுதியாக, இந்த பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது.

59 பணய கைதிகளில் உயிருடன் உள்ள 24 பணய கைதிகள் திரும்பும் வரை இராணுவ தாக்குதல் அதிகரிக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால், காசாவில் இருந்து முழு படைகளையும் இஸ்ரேல் வாபஸ் பெறாவிட்டால், போர்நிறுத்த ஒப்பந்தம் நீடிக்கப்படாவிட்டால், மீதமுள்ள பணய கைதிகளை விடுவிக்க முடியாது என, ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது. 

இதனால், காசா பகுதி மக்களின் நிலை சிக்கலில் தள்ளப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X