Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 09, புதன்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 19 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல் மற்றும் காசா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, முதற்கட்டமாக 1,890 பாலஸ்தீனிய சிறை கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்.
இஸ்ரேல் மீது கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் தொடக்கத்தில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்துள்ளது.
“ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம்” என, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டது.
ஓராண்டை கடந்து, காசாவில் நடந்து வரும் மோதலில் பாலஸ்தீனியர்களில் 46,900 பேர் உயிரிழந்துள்ளனர். 1 இலட்சத்து 10 ஆயிரத்து 700 பேர் காயமடைந்துள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக எகிப்து, கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் ஏற்படுத்தும் பேச்சுவார்த்தைக்கான பணியில் ஈடுபட்டு வருகின்றன. போரை நிறுத்த ஏதுவாக நடந்து வரும் இதில் பலன் ஏற்பட்டுள்ளது. இதன்படி, காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு இஸ்ரேல் மந்திரி சபை, சனிக்கிழமை (18) ஒப்புதல் அளித்தது.
இதனால், பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் மக்கள் 94 பேரை பாதுகாப்பாக விடுவிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இவர்களில் 3இல் ஒரு பகுதியினர் உயிரிழந்து இருக்க கூடும் என கூறப்படுகிறது.
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, முதல் கட்டத்தில் 1,890 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கவுள்ளது என, எகிப்து தெரிவித்துள்ளது.
காசா போர் நிறுத்த ஒப்பந்தம், ஞாயிற்றுக்கிழமை (19) முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, பிடித்து வைத்துள்ள கைதிகளை பரஸ்பரம் விடுவிக்கும் நிகழ்வு நடைபெறும் என எகிப்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.
இந்த முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் 42 நாட்கள் நீடிக்கும். அது இலங்கை நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (19) மதியத்தில் இருந்து தொடங்கும். இதன்படி, முதற்கட்டமாக 1,890 பாலஸ்தீனிய சிறை கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்.
இதற்கு ஈடாக, காசாவில் இருந்து, ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்துள்ள இஸ்ரேல் பணய கைதிகளில் 33 பேர் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
16 minute ago
20 minute ago