Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 16, வியாழக்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 15 , பி.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர, போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கும், பிணைக் கைதிகளை விடுவிக்கவும் ஹமாஸ் அமைப்பு ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதியன்று, பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் கொண்டுவந்த ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கானோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதையடுத்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து 15 மாதங்களாக பிரச்னை நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இதனிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டெனால்டு டிரம்ப், வருகிற 20ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். தான் பதவி ஏற்று இரு வாரங்களுக்குள் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படவில்லை எனில் மிக மோசமான விளைவுகளை ஹமாஸ் படையினர் சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, போர் நிறுத்த பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகள் விடுவிப்பது தொடர்பாக இஸ்ரேல் அளித்துள்ள வரைவு ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் அமைப்பினர் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் நல்ல செய்தி வரும் என எதிர்பார்ப்பதாக இஸ்ரேல் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் தெரிவித்துள்ளார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
5 hours ago