2025 ஜனவரி 19, ஞாயிற்றுக்கிழமை

காஸாவில் இன்று முதல் போர் நிறுத்தம்

Freelancer   / 2025 ஜனவரி 19 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஸா எல்லையில் இன்று காலை 8.30 முதல் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கை நேரப்படி இன்று நண்பகல் 12 மணிக்கு பின்னர் பணயக்கைதிகள் மற்றும் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கான பரிமாற்றம் இடம்பெறுமென கட்டார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் வகித்தன. இது 3 கட்டங்களாக செயற்படுத்தப்படுத்தப்படவுள்ளது.
முதல்கட்டமாக 6 வாரங்களுக்கு போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அந்த காலப்பகுதியில் ஹமாஸ் தரப்பிலிருந்து 33 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதுடன், இவர்களில் பெண்கள், குழந்தைகள், இராணுவ வீரர்களும் அடங்குகின்றனர்.

இதனிடையே இஸ்ரேலில் இருந்து 737 பலஸ்தீனர்கள் விடுவிக்கப்படவுள்ளனர். இதற்கான பட்டியலும் தயாராகியுள்ளது.

இருதரப்பிலிருந்தும் இன்று மாலை 4 மணி அளவில் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X