2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

கல்வி சுற்றுலா சென்ற பஸ் விபத்து: 18 பேர் பலி

Freelancer   / 2025 பெப்ரவரி 27 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்து நாட்டில், கல்வி சுற்றுலா சென்ற  பஸ் விபத்துக்குள்ளானதில்  18 பேர் உயிரிழந்துள்ளனர்.

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் நகரில் இருந்து கிழக்கே பிரச்சின்பரி மாகாணத்தில், புதன்கிழமை (26) அதிகாலை, இரட்டை மாடி கொண்ட பஸ் ஒன்று பயணித்து கொண்டு இருந்தது. அந்த பஸ்சில் 49 பேர் கல்வி சுற்றுலாவுக்காக சென்றிருந்தனர்.

இந்நிலையில், புதன்கிழமை (26) அதிகாலை 3 மணியளவில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ்  மலையில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 18 பேர் உயிரிழந்ததுடன், 31 பேர் காயமடைந்தனர். 

வேகத்தடுப்பு சரிவர பிடிக்காமல் பஸ் விபத்தில் சிக்கியிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .