2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

கமலா ஹாரிஸ் பிரசார அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு

Freelancer   / 2024 செப்டெம்பர் 25 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் கமலா ஹாரிசின் பிரசார அலுவலகம் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தல், நவ.,5ஆம் திகதி நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரிசோனா மாகாணம் டெம்பேவில் உள்ள சதர்ன் அவென்யூ ப்ரீஸ்ட் டிரைவ் அருகே கமலா ஹாரிசின் பிரசார அலுவலகம் மீது மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடந்த போது அலுவலகத்திற்குள் யாரும் இல்லை. சுவர்களில் தோட்டாக்களால் சேதம் ஏற்பட்டுள்ளது. முன்பக்க ஜன்னல்கள் வழியாக துப்பாக்கிச்சூடு நடந்தது என தெரியவந்தது.

இந்நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள அதேசமயம், இதுவரை துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது செய்யப்படவில்லை.

சமீபத்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்பை பிரசார கூட்டத்தில் ஒருமுறையும், கோல்ப் மைதானத்தில் விளையாடிக்கொண்டு இருந்த போது ஒரு முறையும் துப்பாக்கிச்சூடு நடத்தி கொல்ல முயற்சி நடந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரண்டு முக்கிய வேட்பாளர்களை குறிவைத்து தாக்குதல் சம்பவம் நடந்து வருவது அமெரிக்க தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X