Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஓகஸ்ட் 22 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிசை தெரிவு செய்தது சரியான முடிவு தான் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் தெரிவித்தார்.
அமெரிக்காவில், நவ., 5இல் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், குடியரசு கட்சி சார்பில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் களம் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், சிகாகோவில் நடந்த, ஜனநாயக கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன், கமலா ஹாரிஸ_க்கு ஆதரவு தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், “ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிசை தேர்வு செய்தது சரியான முடிவு தான். 2024ஆம் ஆண்டில் தெளிவான தேர்வு கிடைத்துள்ளது என தோன்றுகிறது. ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் இருக்கும் போது குழப்பத்தை ஏற்படுத்தினார். அமெரிக்கர்களின் கனவுகளை நனவாக்க கமலா ஹாரிஸ் தன்னை அர்பணித்தார். எதிரிகளை ஜனநாயக கட்சியினர் குறைத்து மதிப்பிட வேண்டாம். கமலா ஹாரிசுக்கு ஒவ்வொரு அமெரிக்கரும் வாக்களித்தால், மக்களின் கனவுகளை நிறைவேற்ற பணியாற்றுவார்” என்று தெரிவித்தார்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
4 hours ago