2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

கமலா ஹாரிஸுக்கு ஒபாமா ஆதரவு

Freelancer   / 2024 ஜூலை 26 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் களமிறங்க ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, அவர் வெற்றி பெறுவதை உறுதி செய்வோம் எனக் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தல், நவ., 5இல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், 78, போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், 81, போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை மாற்ற வேண்டும் என, ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பலரும் போர்க்கொடி தூக்கினர். இதனால், போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகினார்.

மேலும், கட்சியின் வேட்பாளராக, துணை ஜனாதிபதி கமலா ஹாரிசை நிறுத்த அவர் ஆதரவு தெரிவித்திருந்தார். அடுத்த மாதம், 19 – 22இல் சிகாகோவில் நடக்கவுள்ள கட்சி மாநாட்டில், ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார்.

கமலா ஹாரிசுக்கு கட்சியின் பல மூத்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார். இது தொடர்பாக, 'நியூயோர்க் டைம்ஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜோ பைடன் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்ததாக அந்தச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், டொனால்ட் டிரம்பை, கமலா ஹாரிசால் வெற்றி கொள்ள முடியாது என்று, பரக் ஒபாமா நம்புவதாகக் கூறப்பட்டுள்ளது. இது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஒபாமா வெளியிட்ட அறிக்கையில், “இந்த வாரம், நானும், மிச்சலும், எங்களது நண்பர் கமலா ஹாரிசை தொடர்பு கொண்டு பேசினோம். அமெரிக்காவின் மிகச்சிறந்த ஜனாதிபதியாக அவர் இருப்பார். எங்களின் முழு ஆதரவை அவருக்கு வழங்கினோம். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றி பெறுவார். நாட்டின் முக்கியமான இந்த தருணத்தில், நவம்பர் மாதம் நடக்கும் தேர்தலில் அவர் வெற்றி பெறுவதை உறுதி செய்ய எங்களால் முடிந்ததை செய்வோம். நீங்களும் இணைவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X