Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி ஜோ பைடனை விட கமலா ஹாரிஸ் மிகவும் செயல்திறமையற்றவர் என்று முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5ம் திகதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி பைடன் போட்டியிட்ட நிலையில் பின்னர் போட்டியில் இருந்து விலகினார்.
இதனை தொடர்ந்து கமலா ஹாரிஸ் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இதேபோல் குடியரசு கட்சியின் முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்கிற்கு டொனால்ட் டிரம்ப் அளித்த பேட்டியில், பைடன் மற்றும் கமலா ஹாரிசை டிரம்ப் கடுமையாக விமர்சித்து பேசினார். டிரம்ப் கூறுகையில், ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸ் நிறுத்தப்பட்டது ஒரு சதியாகும். துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் மூன்றரை ஆண்டுகள் இருந்தார். மேலும் அவர்கள் ஏதாவது செய்ய விரும்பினால் இன்னும் 5 மாதங்கள் உள்ளன.
ஆனால் அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள். எல்லாம் பேச்சு மட்டும் தான். கமலா ஹாரிஸ் திறமையற்றவர். பைடனும் திறமையற்றவர். பைடனை காட்டிலும் கமலா மிகவும் திறமையற்றவர்” என்றார்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .