2025 மார்ச் 31, திங்கட்கிழமை

கனடா பொதுத் தேர்தலில் இந்தியா, சீனா தலையீடு?

Freelancer   / 2025 மார்ச் 26 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இந்தியாவும் சீனாவும் தலையிட முயற்சிக்கும் என்று,  அந்நாட்டின் உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடும் எதிர்ப்பு காரணமாக ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதை அடுத்து, கடந்த 9ஆம் திகதி ஆளும் லிபரல் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாதார நிபுணர் மார்க் கார்னி பிரதமராக பதவி ஏற்றார்.

தொடர்ந்து கனடா பாராளுமன்றத்தை முன்கூட்டியே களைத்த பிரதமர் மார்க் கார்னி, ஏப்ரல் 28ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று  அறிவித்தார்.

இந்நிலையில் தேர்தல் குறித்து அந்நாட்டு உளவுத் துறை துணை இயக்குநர் வனேசா லாயிட் செய்தியாளராகளை சந்தித்து பேசுகையில்,இந்தியா மற்றும் சீனா குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது, 

“கனடாவின் தேர்தல் நடைமுறைகளில் தலையிட சீனா செயற்கை நுண்ணறவு கருவிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

கனடாவில் உள்ள இன, கலாச்சார மற்றும் மத சமூகங்களைக் குறிவைத்து அவர்களுக்கு ஆதரவான கதைகளை சமூக ஊடகங்கள் மூலம் சீனா பரப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“இந்திய அரசு தனது அரசியல் செல்வாக்கை மேலும் வலுப்படுத்த, கனடாவின் ஜனநாயக செயல்முறைகளில் தலையிடுவதற்கான நோக்கத்தையும் திறனையும் கொண்டுள்ளதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

“அதேபோல், ரஷியாவும் பாகிஸ்தானும் கனடா தேர்தலில் தலையிட வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலிலும் இந்தியா, சீனா தலையிட முயற்சித்தது. ஆனால், எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை. ஆனாலும் கனடாவின் ஜனநாயக நடைமுறைக்கு இது பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது” என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X