2025 ஏப்ரல் 09, புதன்கிழமை

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்தார்

Editorial   / 2025 ஜனவரி 06 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவில் எதிர்பார்க்கப்பட்டபடியே, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். வரும் புதன்கிழமை கனடாவை ஆளும் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடவிருந்த நிலையில், ட்ரூடோ தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள தனது வீட்டில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

"2015-ஆம் ஆண்டில் பிரதமரான கணம் முதலே கனடாவுக்காகவும் கனேடிய மக்களுக்காகவும் பாடுபட்டு வந்துள்ளேன். நடுத்தர மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்துள்ளேன். கொரோனா தொற்று காலத்தில் மக்கள் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்ததை கண்ணுற்றேன். வட அமெரிக்க கண்டத்தில் தடையில்லா வர்த்தகம் நீடிக்க உழைத்தேன்" என்றார்.

தனது கடந்த கால செயல்பாடுகளை விவரித்த பிறகு அவர் தனது பதவியை ராஜினாமா செய்வது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக அறிவித்த அவர், அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை தற்போதைய பதவியில் நீடிப்பேன் என்றார்.

குடும்பத்துடன் நடத்திய நீண்ட ஆலோசனைக்குப் பிறகு பதவி விலகும் முடிவுக்கு வந்ததாக அவர் கூறினார். தனது வெற்றிக்கு அவர்களது ஆதரவே காரணம் என்று அவர் கூறினார். தனது பதவி விலகல் முடிவு குறித்து நேற்றைய இரவு உணவின் போது குழந்தைகளிடம் தெரிவித்ததாக அவர் கூறினார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X