Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2025 ஏப்ரல் 29 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனடாவில் 2015-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்றதையடுத்து கனடா மீதான வரியை அதிரடியாக அதிகரித்தார்.
உள்நாட்டு அரசியல் பிரச்சினை, டிரம்ப் வரி விதிப்பு உள்பட பல்வேறு காரணங்களால் லிபரல் கட்சியை சேர்ந்த ட்ரூடோ பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரும், லிபரல் கட்சியை சேர்ந்தவருமான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
அவர் கனடாவின் 24-வது பிரதமராக கடந்த மாதம் 14-ந் திகதி பதவியேற்றார்.
கனடா பாராளுமன்றத்தின் பதவிகாலம் வரும் ஒக்டோபர் மாதம் வரை இருக்கும் நிலையில் பிரதமர் மார்க் கார்னி பாராளுமன்றத்தை கலைத்தார்.
மேலும், பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்தவும் மார்க் கார்னி அழைப்பு விடுத்தார். அதன்படி, ஏப்ரல் 28ம் திகதி கனடா பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, லிபரல் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக மார்க் கார்னி களமிறங்கினார்.
கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பெர்ரி பொய்லிவ் பிரதமர் வேட்பாளாரக களமிறங்கினார். இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
343 தொகுதிகளை கொண்ட கனடா பாராளுமன்றத்திற்கு திங்கட்கிழமை (28) தேர்தல் நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இதில் ஆரம்பம் முதலே லிபரல் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. முடிவுகள் தெரியவரத்தொடங்கிய 196 தொகுதிகளில் லிபரல் கட்சி 107 இடங்களிலும் கன்சர்வேட்டிவ் கட்சி 79 இடங்களிலும், இதர இடங்களில் பிற கட்சிகளும் முன்னிலை பெற்றுள்ளன.
பாராமன்றத்தில் பெரும்பான்மை பெற 172 இடங்களில் வெற்றிபெற வேண்டும். பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கும். அந்த கட்சியின் உறுப்பினர்கள் சேர்ந்து பிரதமரை தேர்ந்தெடுக்க உள்ளனர். லிபரல் கட்சி சார்பில் மார்க் கர்னேவும், கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பியர் போயில்வேர் பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
4 hours ago
5 hours ago