2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

கணவரை ஏலத்தில் விற்க விளம்பரம் கொடுத்த பெண்

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 07 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண் ஒருவர் தனது கணவரை ஏலத்தில் விற்க விளம்பரம் கொடுத்த விநோத  சம்பவம்  நியூசிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

தன்னையும், குழந்தைகளையும் 2 நாட்கள் தனியாக வீட்டில் விட்டுவிட்டு, நண்பர்களுடன் கணவர் மீன் பிடிக்க சென்றுவிட்ட கோபத்தில், லிண்டா மெக் அலிஸ்டர் என்ற குறித்த பெண் ஒன்லைனில் தனது கணவரை விற்பனை செய்ய இருப்பதாக, அவரின் உயரம், கணவருக்கு பிடித்தவற்றையை குறிப்பிட்டு விளம்பரம் வெளியிட்டிருந்தார்.

லிண்டாவின் இந்த விளையாட்டுப்பதிவை உண்மை என நம்பி 12 பெண்கள் ஜானை வாங்க விருப்பம் தெரிவித்து, ஏலத்தில் பங்கு பெற்றுள்ளனர். இந்த ஏலம் இலங்கை மதிப்பில் 20,000ரூபாய் வரை சென்றுள்ளது.

இந்நிலையில் குறித்த விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X