2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

கடவுளைக் காண்பதற்காக விரதமிருந்த 4 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2023 ஏப்ரல் 19 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யாவில், கடவுளைக்  காண்பதற்காக நடுக்காட்டில் உண்ணா விரதமிருந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகென்சி என்தெங்கே என்ற மதபோதகர் ”வேறொரு உலகில் உள்ள கடவுளை காண்பதற்கு உணவு, மற்றும் நீர் அருந்தாமல் காத்திருந்தால் கண்டிப்பாக கடவுளை அடையலாம் ”எனப்  பிரச்சாரம் செய்து வந்துள்ளார்.

 இதனை உண்மையென நம்பி கிளிஃபி காட்டிற்குள் சென்றிருந்தவர்களில் நால்வர் உயிரிழந்துள்ள நிலையில் 15 பேரை மீட்ட பொலிஸார் தலைமறைவான போதகரைத்  தேடி வருகின்றனர்.

அக்காட்டில் மேலும் பலரின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .