Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 17, வியாழக்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 24 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓடும் ரயிலில், இளம்பெண் ஒருவரை இளைஞன் ஒருவர் தீயிட்டு கொளுத்திய சம்பவம், அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம், புரூக்ளின் நகா் நோக்கி ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதன்போது, மன்ஹாட்டன் ரயில் நிலையத்தில் ரயில் நின்று கொண்டிருந்த போது, அந்த ரயிலில் இளம்பெண் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சென்ற இளைஞன் ஒருவர், அந்தப் பெண்ணின் ஆடையில் தீ வைத்தார். இதனால் உடல் முழுவதும் தீ பற்றியதால் இளம்பெண் அலறி துடித்தார். ஆனால் அந்தப் பெண் உயிரிழக்கும் வரை குறித்த இளைஞன் நின்று இரசித்துக் கொண்டிருந்தார்.
பின்னர் மன்ஹாட்டன் ரயில் நிலையத்தில் இறங்கிய குறித்த இளைஞன், சாதாரணமாக நடந்து சென்றார்.
இதனையடுத்து அங்கு விரைந்த பொஇஸா், குறித்த இளைஞனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
முன்விரோத தகராறில் இந்த கொலையை அவர் செய்தாரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago