2025 பெப்ரவரி 15, சனிக்கிழமை

ஒட்சிசன் சிலிண்டருடன் மரதன்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 04 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவைச் சேர்ந்த டிவன் ஹலாய்க்கு (Diven Halai) என்பவர் ஒட்சிசன் சிலிண்டருடன் மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட முதல் மனிதர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

37 வயதான டிவனுக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு இடைநிலை நுரையீரல் நோய் (IDL) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் சுவாசிப்பது மற்றும் இரத்த ஓட்டத்தில் ஒட்சிசனைப் பெறுவது கடினமான விடயம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த ஓகஸ்ட் மாதம் 2021-ஆம் ஆண்டு அவர் எங்கு சென்றாலும் எடுத்துச் செல்லும் வகையில் ஒட்சிசன் சிலிண்டர் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஓட்டப்பந்தய வீரரான அவர் ஆஸ்துமா மற்றும்  நுரையீரல் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டும் விதமாக மரதன் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். 

அந்தவகையில் ஹலாய் இதுவரை 15,000 பவுண்டுகளுக்கு மேல் நிதி திரட்டியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X