Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 06 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.நா மனித உரிமைகள் அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் என ஏற்கெனவே ட்ரம்ப் அறிவித்து இருந்த நிலையில், தற்போது அதற்கான அரசாணையை பிறப்பித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து, டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அவர், சமீபத்தில் உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதை தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு அதிக இறக்குமதி வரியை விதித்து வருகிறார்.
அதேபோல ஐநா மனித உரிமை அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் என ட்ரம்ப் அறிவித்து இருந்தார். இந்த நிலையில், இந்த அறிவிப்பை நிறைவேற்றும் விதமாக விலகுவதற்கான அரசாணையை டிரம்ப் பிறப்பித்துள்ளார்.
இதன் மூலம், ஐநா. அமைப்புக்கு அமெரிக்கா நிதியுதவி அளிப்பது முழுமையாக நிறுத்தப்படுகிறது
இது குறித்து அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பிறகு புதிதாக போர்கள் தொடங்குவதைத் தடுப்பதற்கும் சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டவும் ஐ.நா.வுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது. ஆனால் அந்த அமைப்பில் சில துணை அமைப்புகள் இந்த அடிப்படை நோக்கத்திலிருந்து தடம் மாறி அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
3 hours ago
5 hours ago