2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

ஏமனில் மரண தண்டனை; நர்ஸை மீட்பதில் புதிய சிக்கல்

Freelancer   / 2024 செப்டெம்பர் 10 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியாவை மீட்பதற்கான முயற்சி தடைபட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு, அதிக சம்பளத்தை வழக்கறிஞர் எதிர்பார்ப்பதே இதற்கு காரணம் ஆகும்.

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா. கடந்த 2017ஆம் ஆண்டு ஏமனில் நர்ஸாக பணியாற்றிய போது, அந்நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

அது முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அவரை காப்பாற்ற தாயார், பிரேமா குமாரி 5 மாதங்களாக ஏமனில் முகாமிட்டு உள்ளார்.

ஏமன் நாட்டு சட்டப்படி பிளட் மணி (இறந்தவரின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அவர்கள் கேட்கும் நஷ்ட ஈடாக பணம் வழங்குவதுடன், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மன்னித்தால் குற்றவாளியின் தண்டனை தள்ளுபடி செய்யப்படும்) எனும் வழக்கம் உள்ளது. இதனை பயன்படுத்தி, நிமிஷா பிரியாவை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காக, தலால் அப்தோ மஹ்தி தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த அப்துல்லா அமீர் என்ற வழக்கறிஞரை இந்திய அரசு ஏற்பாடு செய்தது. இதற்காக ஜூலை 4ஆம் திகதி அவருக்கு 19,871அமெரிக்க டொலர் பணம் வெளியுறவு அமைச்சகம் மூலம் வழங்கப்பட்டது.

ஆனால், அவர், மேலும் 20 ஆயிரம் டொலர் பணம் கொடுத்தால் தான் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவேன் எனக்கூறியுள்ளார். இதனால், பேச்சுவார்த்தை நடப்பது தடைபட்டுள்ளது.

'கிரவுட் பண்டிங்' என்ற முறையில் வெளிநாடு வாழ் மலையாளிகளிடம் நிதி திரட்டித்தான், ஏற்கனவே பணம் வழங்கப்பட்டது. இப்போது மேலும் அதே அளவு பணத்தை எப்படி திரட்டுவது, யாரிடம் உதவி கோருவது என்று தெரியாமல், அவரது குடும்பத்தினர் திணறி வருகின்றனர்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X