2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

எலிகளைப் பிடித்துக் கொடுத்தால் ரூ 5.8 கோடி

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 05 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நீயூயோர்க் நகரில் வசித்து வரும் ஏராளமான மக்கள் எலித் தொல்லையால் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக் கூறப்படுகின்றது.

குறிப்பாக கடந்த 2020ஆம் ஆண்டு ஒட்டோபர் மாதத்தில் இருந்து அந் நகரத்தில் எலிகளின் எண்ணிக்கை 71 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக நியூயோர்க் சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் எலித் தொல்லையில் இருந்து மக்களைக் பாதுகாக்கும் விதமாக அந்நகரத்தின் மேயர் எரிக் ஆடம்ஸ் ஒரு புது அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார் .

அந்த வகையில் எலிகளை பிடித்துக் கொடுக்க முன்வருபவர்களுக்காக  ’டைரெக்டர் ஆஃப் ரோடண்ட் மிட்டிகேஷன்’ என்ற வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளார்  மேயர்.

இவ்வேலையில் சேருபவர்களுக்கு இலங்கை மதிப்பில் 5.8  கோடி ரூபாய் மாத சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவ் வேலைக்கான அறிவிப்பு, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .