Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Mithuna / 2024 ஜனவரி 17 , பி.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட கொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் (Kim Jong Un). "சுப்ரீம் பீபிள்'ஸ் அசெம்பிளி" எனும் வட கொரிய பாராளுமன்றத்தில் கிம் உரையாற்றினார். அதில் தென் கொரியாவுடனான உறவு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அப்போது அவர், “தென் கொரியாதான் எங்கள் முதல் எதிரி. ஒரு வேளை போர் தேவைப்பட்டால் அதை தவிர்க்க கூடாது. தென் கொரியாவுடன் இணைப்புக்கு இனி சாத்தியமில்லை.
வட கொரியாவிற்கு பிரதான எதிரி தென் கொரியாதான் என வலியுறுத்தும் வகையில் வட கொரிய மக்களுக்கு கற்பிக்க வேண்டும். இதற்காக தேவைப்பட்டால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும்.
இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைகள் சரியான முறையில் வரையறுக்கப்பட வேண்டும். நாம் போரை விரும்பவில்லை; ஆனால், தேவைப்பட்டால் ஈடுபட தயங்கவே கூடாது.
தென் கொரியா முழுவதையும் ஆக்கிரமிக்க வட கொரியா தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். அவர்கள் நமது உடன்பிறப்புகள் அல்ல. இரு நாடுகளுக்கிடையேயான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், இரு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை ஏற்படுத்த முனைந்து வந்த 3 அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு கிம் தடை விதித்துள்ளார்.
கிம் ஜாங் உன் தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்வினையாக, "வட கொரியா தாக்குதலில் ஈடுபட்டால், பல மடங்கு வலிமையுடன் எதிர் தாக்குதலில் ஈடுபடுவோம்" என தென் கொரியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
50 minute ago
3 hours ago