2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

ஊழியர்கள் போராட்டத்தால் முடங்கிய ரயில் சேவை

Freelancer   / 2025 ஜனவரி 29 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷில், சுமார் 25 ஆயிரம் ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரயில் சேவை முடங்கியதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

பங்களாதேஷில், இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. இதன் முடிவில் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பி ஓடி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதனையடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதற்கு மத்தியில் சம்பள உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்குள்ள ரயில்வே ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

போராட்டக்காரர்களுடன் இடைக்கால அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள சுமார் 25 ஆயிரம் ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரயில் சேவை முடங்கியதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X