2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஊதிய உயர்வு கொடுத்த முதலாளி கைது

Freelancer   / 2024 ஜூலை 03 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மாரில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்ததற்காக ஒரு கடை உரிமையாளரை அந்நாட்டு அரசாங்கம் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்த கடை உரிமையாளரின் மூன்று கைபேசி கடைகளையும் அரசாங்கம் மூடக்கியுள்ளது.

தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்த காரணத்திற்காக இதேபோல் 10 முதலாளிமார்களை மியான்மார் அரசு கைது செய்துள்ள நிலையில், அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதற்காக அவரை கைது செய்துள்ளார்கள் என்ற கேள்விக்கு, ஒரு வித்தியாசமான காரணத்தை அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மியான்மாரில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்தால் விலைவாசி விண்ணை தொடும். அந்தவகையில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்தால் மியான்மார் பணவீக்கம் அதிகரித்து வருகிறது என்பதை மக்கள் நம்ப மறுப்பார்கள்.   

இது அரசாங்கத்திற்கு தலைகுனிவாகும். இது ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை தூண்டும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது.

அதேசமயம், மியன்மாரின் இந்த நடவடிக்கையால் பல தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதுடன், விலைவாசி உயர்வுக்கு மத்தியில் வேலையும் இல்லாமல் அவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .